International
பிரான்ஸ்

லியோன் நகர் அருகே வீதி விபத்து! – பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்வு…!!

நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லியோன் நகருக்கு அருகே இடம்பெற்ற வீதி விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர். 

இவ்விபத்து அதிகாலை 4:40 மணிக்கு  Venissieux நகரில் இடம்பெற்றதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.  avenue of Vénissieuxa வீதியில் அதிவேகமாக மகிழுந்தில் சென்ற இளைஞன் மற்றுமொரு மகிழுந்துடன் மோதியுள்ளார். இந்த விபத்தில் மகிழுந்துகள் உடனடியாக தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் 17 வயதில் இருந்து 21 வயதுக்குட்பட்ட நான்கு இளம் பெண்கள் சாவடைந்துள்ளனர். 

மேலும் ஒரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை குறித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை ஜோந்தாமினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!