International
பிரான்ஸ்

TGV தொடருந்தில் மோதி 20 மாடுகள் உயிரிழப்பு! – காயமடைந்த மாடுகளுக்கு கருணைக்கொலை..!!

தொடருந்து ஒன்றில் மோதி 20 மாடுகள் சாவடைந்துள்ளமை பெரும் பரபரப்பாக மாறியுள்ளது. 

நேற்று சனிக்கிழமை Lausanne நகரில் இருந்து பரிசுக்கு வரும் TGV தொடருந்து ஒன்றிலேயே இந்த மாடுகள் மோதி சாவடைந்துள்ளன. Jura மாவட்டத்தின் La Joux வனாந்தர பகுதியூடாக குறித்த தொடருந்து பயணித்துக்கொண்டு இருந்துள்ளது. 240 பயணிகள் தொடருந்தில் இருந்தனர். திடீரென தண்டவாளத்துக்கு குறுக்கே மாடுகள் எதிர்ப்பட்டுள்ளன. பெரும் திரளான மாடுகழ்ல் மோது தொடருந்து மோதிச் சென்றுள்ளது. இதில் 20 மாடுகள் மொத்தமாக உயிரிழந்துள்ளன. 

மேலும் சில மாடுகள் மோசமாக காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் உடனடியாக கருணைக்கொலை செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!