International
பிரான்ஸ்

நெடுஞ்சாலையில் உள்ள கழிவறையில் கைவிடப்பட்ட குழந்தை! – காவல்துறையினர் விசாரணை..!!

புதிதாக பிறந்த குழந்தை ஒன்று நெடுஞ்சாலை கழிவறையில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் Hérault மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. Lunel நகரையும் Montpellier நகரையும் இணைக்கும் A9 நெடுஞ்சாலையில் உள்ள கழிவறையில் குழந்தை ஒன்று கிடந்துள்ளது. உடனடியாக ஜோந்தாமினர்கள் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர். குழந்தை பூரண உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்த ஜோந்தாமினர், குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விசாரணைகளின் பின்னர், பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்துவிட்டு, கழிவறையில் விட்டு தப்பிச் சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.  நேற்று ஞாயிற்றுக்கிழமை 19:30 மணி அளவில் குழந்தை மீட்கப்பட்டிருந்தது.  

பின்னர் சில நிமிடங்களில் குழந்தையை பிரசவித்த 30 வயதுடைய பெண் அங்கிருந்து நடந்து தப்பிச் சென்றிருந்த நிலையில் அவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.  சிகிச்சைகளுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!