International
பிரான்ஸ்

அதிகமாக மது உட்கொண்டதால் உயிரிழந்த இளைஞன்…!!

 பரிசில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளான். 

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள Dehors Brut இரவு விடுதியில் மிக அதிகமாக குடித்திருந்த இளைஞன் ஒருவன் திடீரென மயக்கம் போட்டு விழுந்திருந்தார். உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு, அவன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தான். 

பின்னர், இன்று மதியம் 13:30 மணிக்கு மருத்துமனையில் உயிரிழந்திருந்தான். உயிரிழந்த இளைஞனுக்கு 21 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக விடுதியில் இருந்து  இளைஞனை மீட்ட தீயணைப்பு படையினர் 15 நிமிடங்கள் வரை முதலுதவி சிகிச்சைகள் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவில் மது உட்கொண்டிருந்ததால் மருத்துவ சிகிச்சைகள் எதுவும் பலனளிக்கவில்லை என மருத்துவர் குறிப்பிட்டார். 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!