International
பிரான்ஸ்

விபத்தை ஏற்படுத்தியவரை சுட்டுத்தள்ளிய நபர்! – கைது செய்த காவல்துறை…!!

வாகன விபத்தை ஏற்படுத்திய நபர் ஒருவரை சாரதி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

 இச்சம்பவம் Var மாவட்டத்தின் La Garde (Toulon நகருக்கு அருகே) நகரில் இடம்பெற்றுள்ளது. நேற்று காலை இங்குள்ள உள்ளூர் வீதி ஒன்றில் இரண்டு மகிழுந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதில் ஆத்திரமடைந்த ஒரு சாரதி தனது மகிழுந்துக்குள் இருந்து ரைஃபிள் வகை துப்பாக்கியை எடுத்து விபத்தை ஏற்படுத்திய மற்ற சாரதியை சுட்டுள்ளார். அவர் தோள் பட்டையில் காயமடைந்துள்ளார். 

இச்சம்பவம் பெரும் பரபரப்பாகியுள்ளது. துப்பாக்கியால் சுட்ட நபர் 33 வயதுடையவர் எனவும், அவரை காவல்துறையினர் முன்னதாகவே பல்வேறு குற்றச்செயல்களின் மூலம் நன்கு அறிவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் 30 நிமிடங்களின் பின்னரே கைது செய்யப்பட்டிருந்தார் எனவும், பேருந்து ஒன்றுக்குள் அவர் ஒளிந்திருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுளது. இது தொடர்பான விசாரணைகளை உள்ளூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!