International
பிரான்ஸ்

Sarcelles நகரில் தீ! – 14 பேர் காயம்! – 50 தீயணைப்பு வீரர்கள் தலையீடு..!!

Sarcelles, (Val-d’Oise) நகரில் இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் 14 பேர் காயமடைந்துள்ளனர். 50 தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டிருந்தனர். 

நேற்று புதன்கிழமை காலை 8 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள கட்டிடம் ஒன்றில் கீழ் தளத்தில் தீ பரவியுள்ளது. முதல்கட்ட தகவல்களின் படி <<சாண்ட்விச் தயாரிக்கும் ரோஸ்ட்டர் ஒன்றில் இருந்தே தீ பரவ ஆரம்பித்துள்ளது>> என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் சம்பவத்தின் போது 20 பேர் இருந்ததாகவும் அதில் 14 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோஸ்ட்டரில் இருந்து பரவிய தீ மற்றைய இடங்களுக்கும் பரவியது. இதனால் உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். 

சம்பவ இடத்துக்கு உடனடியாக 50 தீயணைப்பு வீரர்கள் வந்திருந்தனர். பலரை கட்டிடத்தில் இருந்து வெளியேற்றியதுடன், தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். Gonesse மற்றும் Eaubonne நகர மருத்துவமனைகளுக்கு காயமடைந்தவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். மொத்தமாக 14 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!