International
பிரான்ஸ்

ஜோந்தாமி அதிகாரி மீது கத்துக்குத்து தாக்குதல்! – வீதி கண்காணிப்பில் ஈடுபட்டபோது விபரீதம்..!

விதி கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஜோந்தாம் அதிகாரி ஒருவரை சாரதி ஒருவர் தாக்கியுள்ளார்.

Haute-Marne நகரில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை இங்குள்ள A31 நெடுஞ்சாலையில் ஜோந்தாம் அதிகாரிகள் இருவர் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த மகிழுந்து ஒன்றை குறித்த அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். சாரதியை விசாரித்துக்கொண்டிருந்த போது அவரிடன் முறையான சாரதி அனுமதி பத்திரம் இல்லை என தெரியவந்துள்ளது. இதனால் அவரை கைது செய்யப்படுவதற்கு ஜோந்தாமினர் தயாராகினர். 

ஆனால் அதற்குள்ளாக குறித்த சாரதி கூரான கத்தி ஒன்றின் மூலம் ஜோந்தாம் அதிகாரி ஒருவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார். அதிகாரியின் கணுக்காலில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இதற்குள்ளாக இரண்டாவது ஜோந்தாம் அதிகாரி தாக்குதலாளியை மடக்கி பிடித்துள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!