International
பிரான்ஸ்

திகில் திரைப்படம் எடுக்க முற்பட்ட இளைஞர்கள்! – சிறைத்தண்டனையில் முடிந்த சோகம்..!!

இரண்டு இளைஞர்கள் திகில் திரைப்படம் ஒன்றை எடுக்க முற்பட்டனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததோடு சிறைத்தண்டனையும் கிடைத்துள்ளது. 

நாளை வெள்ளிக்கிழமை 13 ஆம், உலகம் முழுவதும் ஒரு ‘பயங்கரமான நாளாக’ அடையாளப்படுத்தப்படுகின்றது. மாதத்தின் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமையாக இருக்கும் பட்சத்தில் அந்த நாள் மிக பயங்கரமானதாக இருக்கும் ஒரு அச்சம் அமெரிக்க போன்ற நாடுகளில் இன்னமும் நம்பப்படுகின்றது. Nancy (Meurthe-et-Moselle) நகரில் இருக்கும் இரண்டு இளைஞர்கள் இதை அடிப்படையாக கொண்டு திரைப்படம் ஒன்றை எடுக்க முற்பட்டுள்ளனர். Friday the 13th” எனும் ஆங்கிலப்படத்தை தழுவி, அதில் வரும் கொலைகாரன் போன்று வேடமணிந்து பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளார்கள். இதனை கேமரா மூலம் பதிவு செய்தும் உள்ளனர். 

ஆனால் விஷயம் காவல்துறையினருக்கு சென்றுள்ளது. பொதுமக்களுக்கு எவ்வித அறிவுறுத்தலும் இன்றி இப்படி அச்சுறுத்தியதன் காரணமாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளில் குறித்த காணொளியை நாளை வெள்ளிக்கிழமை 13 ஆம் திகதி இணையத்தில் வெளியிட திட்டமிட்டிருந்ததாக அறிய முடிகிறது. ஆனால் அவர்கள் நாளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். ஒருவருட சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக அறிய முடிகிறது. 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!