International
பிரான்ஸ்

விமானநிலையத்தில் 750 கிலோ எடையுள்ள khat போதைப்பொருள் மீட்பு..!!

ஐரோப்பாவில் தடைசெய்யப்பட்ட khat எனும் போதைப்பொருட்களுடன் பிரான்சுக்கு வந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாள்-து-கோல் விமான நிலையத்தில் வைத்து இந்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த பத்து நாட்களில் ஐந்து தடவைகள் இதுபோல் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக 750 கிலோ எடையுள்ள khat இலைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் சுங்கவரித்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இவ்வகை khat செடிகள் கிழக்கு ஆப்பிரிக்காவில் விளைகின்றன. போதை மருந்தாக பயன்படுத்தப்படும் இவ்வகை செடிகள் ஐரோப்பா முழுவதும் தடைவிதிக்கப்பட்டுள்ளன. 

இவ்வாரத்தில் மட்டும் 750 கிலோ எடையுள்ள khat இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!