International
பிரான்ஸ்

தான் வசித்த கிராமத்துக்கு €2.4 மில்லியன் யூரோக்கள் வழங்கிய மூதாட்டி..!!

Yvelines மாவட்டத்தில் உள்ள கிராம் ஒன்றுக்கு, அக்கிராமத்தில் வசித்த மூதாட்டி ஒருவர் €2.4 மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள நன்கொடை வழங்கியுள்ளார். 

இங்கு வசித்த Janine Vins எனும் பணக்கார மூதாட்டியே இந்த நன்கொடையை வழங்கியுள்ளார். இவர் இவ்வருடத்தின் மே  மாதத்தில் உயிரிழந்திருந்தார். Yvelines மாவட்டத்தில் உள்ள 3,800 பேர் மாத்திரமே வசிக்கும் Juziers எனும் சிறு கிராமத்தி வசித்தார். கிராம மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவரும், கிராமத்தை பெரிதும் நேசித்தவரான இவர் இதுவரைக்கும் பல நன்கொடைகளை வாரி வழங்கியிருந்தார். 

முன்னதாக Raoul Follereau Foundation எனும் அமைப்பிற்கு €408,000 யூரோக்கள் நன்கொடை வழங்கியிருந்தார். ARC Foundation அமைப்பிற்கு €100,000 நன்கொடையும், சிறு கிராமங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு €50,000 நன்கொடையும் வழங்கியிருந்தார். 

இந்நிலையில், அவர் உயிரிழந்ததன் பின்னர் €2.4 மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள சொத்து ஒன்றை இந்நகர சபைக்கு வழங்கியுள்ளார்.  அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக rue de la Poste எனும் வீதியின் பெயரை மாற்றி rue Jeannine Vins எனும் பெயரை சூட்டியுள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!