International
பிரான்ஸ்

நாளை மாபெரும் போக்குவரத்து தடை! – முழு விபரங்கள்…!!

நாளை வெள்ளிக்கிழமை இல்-து-பிரான்சுக்குள் பல்வேறு போக்குவரத்து சேவைகள் தடைப்பட உள்ளன. 

UNSA, CGT, FO, CFE-CGC மற்றும் SUD unions ஆகிய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு தங்கள் RATP ஊழியர்களை அழைத்துள்ளர். அதைத் தொடர்ந்து, பல்வேறு மெற்றோ சேவைகள், பேருந்து சேவைகள் தடைப்பட உள்ளன. மூன்றில் ஒரு பேருந்துகள் இயங்காது என தெரிவிக்கப்படுள்ளது. 

தொடருந்தில் RER A சேவைகளில் 6:30 – 10:30 / 16:30 / 20:30 மணி சேவைகளும்  RER B சேவைகளில் 6:30 – 10:30 / 16:30 / 20:30 மணி சேவைகளும் மாத்திரமே இயங்கும் எனவும், அதிலும் RER B சேவை Gare du Nord நிலையத்தில் இருந்து இயங்காது எனவும் தெரிவிக்கப்படுள்ளது. 

மெற்றோ சேவைகளில் 

வழி 2,  3,  3bis,  5,  6, 7bis, 10, 11, 12 மற்றும் 13 ஆகிய வழிச் சேவைகள் தடைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மீதமான சேவைகளில் நான்கில் ஒரு மெற்றோ இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ட்ராம் சேவைகளில் T3bis மற்றும் T5 ஆகிய சேவைகளில் இரண்டில் ஒரு ட்ராம் இயங்கும் எனவும், T1, T2, T3a, T6, T7 மற்றும் T8 ஆகிய ட்ராம்களில் 6.30-9.30 / 17h-20h மணி சேவைகள் மாத்திரமே இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு மாற்று வழிகளாக RATP தனது பயனாளர்களுக்கு 30 நிமிட Cityscoot (மிதிவண்டி/ மின்சார மிதிவண்டி) சேவைகள் வழங்க உள்ளதாகவும், உங்களது மகிழுந்து தரிப்பிட கட்டணத்தில் 50% பணத்தினை மீள அளிப்பதாகவும், VTC வாடகை மகிழுந்து சேவைகளுக்கு -20 வீத விலைக்கழிவும் அளிப்பதாக உறுதியளித்துள்ளது. 

அதேவேளை, RER C, RER D, RER E மற்றும் transilians ஆகிய சேவைகள் வழமை போன்று இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. T11 ட்ராம் சேவைகளும் வழமை போல் இயங்கும் என அறிய முடிகிறது. 

இன்று வியாழக்கிழமை12 ஆம் திகதி 22:00 மணியில் இருந்து சனிக்கிழமை 14 ஆம் திகதி காலை 7:00 மணி வரை இந்த போக்குவரத்துக்கள் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : Le Parisien

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!