International
பிரான்ஸ்

காட்டுக்குள் கஞ்சா செடி வளர்த்தவருக்கு சிறை…!!

நீஸ் நகரில் நபர் ஒருவர் காட்டுக்குள் கஞ்சா செடி வளர்ந்துள்ளார். 

Mouans-Sartoux (Alpes-Maritimes) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப்பகுதியில் உள்ள வனாந்தர பகுதியில் 29 வயதுடைய நபர் ஒருவர் கஞ்சா செடி ஒன்றை வளர்த்துள்ளார். 1.2 மீற்றர் உயரம் வரை இச்செடி வளர்ந்துள்ளது. வனப்பகுதிக்குள் மிதிவண்டி சவாரி செய்யும் இளைஞன் ஒருவன் இந்த செடியை பார்த்துவிட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்ததோடு, செடியின் உரிமையாளரையும் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட நபரின் வீட்டில் இருந்து பாரிய அளவு கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. பின்னர் குறித்த இளைஞனுக்கு நீதிமன்றத்தால் எட்டு மாத சிறைத்தண்டனையும் தண்டப்பணமும் அறவிடப்பட்டுள்ளது. 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!