International
பிரான்ஸ்

Bois de Vincennes மீட்கப்பட்ட சடலம்! – பாலியல் துன்புறுத்தலின் பின்னர் படுகொலை..!!

நேற்று புதன்கிழமை இரவு, Bois de Vincennes பகுதியில் இருந்து சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர். 

இரவு 22:35 மணிக்கு தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். Route des Pyramide இல் உள்ள பகுதி ஒன்றில் மகிழுந்து ஒன்று தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் மகிழுந்து தீயிணை அணைக்கும் போது, அருகே நபர் ஒருவரது சடலம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். 

ஆனால் அச்சடலம் தீயில் கருகியிருக்கவில்லை மாறாக படுகொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த சடலம் ஒரு ஆணுடையது எனவும், கழுத்தில் இடுப்பு பட்டியால் கட்டப்பட்டிருந்தது எனவும், ஆண் உறுப்பு அறுத்து எடுக்கப்பட்டு மோசமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொல்லப்பட்ட நபர் வீடற்றவர் (SDF) எனவும், குற்றவியல் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!