International
பிரான்ஸ்

சகோதரனை சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி! – மார்செயில் சம்பவம்…!!

ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் தனது சகோதரனை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். 

மார்செயின் 14 ஆம் வட்டாரத்தில் உள்ள Spinelli எனும் சிறு நகரில் இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. 57 வயதுடைய நபர் ஒருவரது வீட்டுக்கு வந்திருந்த அவருடைய சகோதரர், சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 57 வயதுடைய குறித்த நபர் உயிரிழந்துள்ளார். தவிர அவரது 26 வயதுடைய மகன் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தை தொடர்ந்து, தாக்குதலாளி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். 

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் காயமடைந்த இளைஞனை துரிதமாக மருத்துவமனையில் கொண்டு சேர்ந்தனர். தப்பியோடிய முன்னாள் காவல்துறை அதிகாரி Allauch நகரில் வைத்து கைது செய்யப்பட்டார். 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!