International
பிரான்ஸ்

அவதானம்! – இன்று போக்குவரத்து தடை! – சிலமணிநேரம் இயங்கும் RER A மற்றும் RER B…!!

RATP ஊழியர்கள் மேற்கொள்ளும் வேலை நிறுத்தம் காரணமாக இன்று வெள்ளிக்கிழமை பெரும் போக்குவரத்து தடை ஏற்பட உள்ளது. இது தொடர்பான தகவல்கள் முன்னதாகவே வழங்கியிருந்தோம். தற்போது சில மேலதிக தகவல்கள். 

RER A, RER B :

 RER A மற்றும் RER B சேவைகள் சில மணிநேரங்கள் மாத்திரமே சேவையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

RER A மூன்றில் ஒரு தொடருந்து இயங்கும் எனவும், அதிலும் காலை 6.30 மணியில் இருந்து 9.30 மணி வரையும், மாலை 5 மணியில் இருந்து 8 மணி வரை மாத்திரமே இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

RER B சேவைகளில் மொத்தம் ஐந்து தொடருந்துகள் மாத்திரம் செயற்படும் எனவும், அத்தொடருந்து கார்-து-நோர் (Gare du Nord) நிலையத்தை தொடுக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மெற்றோ :

இன்று மொத்தமாக பத்து மெற்றோ சேவைகள் நாள் முழுவதும் தடைப்பட உள்ளன. 2, 3, 3bis, 5, 6, 7bis, 10, 11, 12 மற்றும் 13 ஆகிய வழி சேவைகள் தடைப்பட உள்ளன. 

பேருந்து :

பேருந்துகளில், 350 சேவைகளில் 134 சேவைகள் மாத்திரமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ட்ராம் : 

ட்ராம் சேவைகளில் வழி T3bis மற்றும் வழி T5 ஆகிய சேவைகள் இரண்டில் ஒன்று இயங்கும். 

T1, T2, T3a, T6, T7 மற்றும் T8 சேவைகள் காலை மூன்று மணிநேரம் (6.30 இல் இருந்து 9.30 மணி வரை) மாலை மூன்று மணிநேரம் (5 மணியில் இருந்து 8 மணி வரை) மட்டும் இயங்கும் எனவும், T11 வழிச் சேவை வழமை போன்று இயல்பாக இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!