International
பிரான்ஸ்

RATP ஊழியர்கள் வேலை நிறுத்தம்! – 250 கி.மீ போக்குவரத்து நெரிசல்..!!

இன்று வேலை நிறுத்தம் காரணமாக காலை 7:30 மணியளவில் 250 கி.மீ போக்குவரத்து நெரிசல் பதிவாகியுள்ளது. 

இன்று செப்டம்பர் 13 ஆம் திகதி ஏழு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இல்-து-பிரான்சுக்குள் போக்குவரத்துக்கள் கணிசமான அளவு பாதிக்கப்பட்டுள்ளன.  அதைத் தொடர்ந்து இன்று காலை முதல் இல்-து-பிரான்சின் பிரதான வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காலை 7:30 மணி அளவில் 130 கி.மீ போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பார்த்ததை விட அதிகமாக 250 கி.மீ தூரம் போக்குவரத்து நெரிசல் பதிவாகியுள்ளது. 

நெடுஞ்சாலைகளில் A6,  A4, A1 மற்றும்  A15 ஆகிய சாலைகள் போக்குவரத்து நெரிசலை சந்தித்துள்ளது. அதைத் தொடர்ந்து, இன்று மாலை மீண்டும் அதிகூடிய நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக நிக்கோலா சர்கோஷி ஜனாதிபதியாக இருந்தபோது ஒக்டோபர் 18, 2007 ஆம் ஆண்டு மிகப்பெரிய வேலை நிறுத்தத்தை RATP ஊழியர்கள் மேற்கொண்டிருந்தனர். அதன் பின்னர் தற்போது மாபெரும் வேலை நிறுத்தம் இதுவாகும். 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!