International
பிரான்ஸ்

நகர மண்டபத்தின் தோட்டத்தில் கிடந்த சடலம்! – 17 சிறுவன் கைது..!!

செவ்வாய்க்கிழமை Rouen நகரமண்டப தோட்டத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நேறரு வியாழக்கிழமை சிறுவன் ஒருவன் கைதுசெய்யப்பட்டுள்ளான். .

கைது செய்யப்பட்ட சிறுவனை பல்வேறு வன்முறைச் சம்பவங்களூடாக காவல்துறையினர் முன்னதாகவே அறிவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை காலை Rouen நகர மண்டபத்தின் பூங்காவில் ஆண் ஒருவரது நிர்வாணச் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்தினை ஆராய்ந்த காவல்துறையினர், மூவர் இக்கொலைக்கு பின்னால் உள்ளதாக தெரிவித்ததோடு, உடற்கூறு ஆதாரங்களின் (DNA) படி குறித்த 17 வயது சிறுவனை கைது செய்தனர். 

Darnétal நகரில் வைத்து அவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த வழக்கில் மேலும் இருவர் தேடப்பட்டு வருகின்றனர். கொல்லப்பட்ட நபர் 40-50 வயதுக்குட்பட்டவர் என அறிய முடிகிறது. விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!