International
பிரான்ஸ்

சிறைச்சாலைக்குள் இளம் கைதி தற்கொலை!!

24 வயதுடைய இளம் கைதி ஒருவர் சிறைச்சாலைக்குள் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

Maine-et-Loire இல் உள்ள Angers சிறைச்சாலையில் திங்கட்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரவு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மேற்பார்வையாளர் ஒருவர், குறித்த சிறைக்கைதி நினைவு இழந்து இருப்பதை அவதானித்துடன், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கவும் முயற்சித்துள்ளார். ஆனால் குறித்த இளைஞன் சில நிமிடங்களில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இளைஞனின் உயிரிழப்பு தற்கொலை என தெரிவித்த போதும், அதற்குரிய காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது தொடரான விசாரணைகளை உள்ளூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!