International
பிரான்ஸ்

இன்று இரவு முழுவதும் திறந்திருக்கும் மெற்றோ!!

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வேலை நிறுத்தம் மற்றும் பெரும் போக்குவரத்து தடையை அடுத்து, இன்று சனிக்கிழமை இரவு முழுவதும் மெற்றோ சேவைகள் இயங்க உள்ளது. 

டிசம்பர் 31, இசை இரவு ஆகிய இரண்டு நிகழ்வுகளை தவிர்த்து முதன் முதலாக மெற்றோக்கள் இரவில் இயங்க உள்ளன. வேலை நிறுத்தத்தை அடுத்து இன்று காலை 5:30 மணிக்கு சேவைகள் இயல்புக்கு திரும்புகின்றது. இந்த சேவை தொடர்ச்சியாக இன்று இரவு முழுவதும் கடந்து நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு வழமையான நேரத்தில் சேவைகள் முடிவுக்கு வரும். 

Nuit festive என அழைக்கப்படும் இந்த இரவு நேர மெற்றோக்கள், மொத்தமாக 6 சனிக்கிழமைகள் திட்டமிடப்பட்டுள்ளது.  இம்மாதத்தில் (செப்டம்பர்) இருந்து 2020 மார்ச் மாதம் வரை மாதத்தில் ஒரு சனிக்கிழமை என மொத்தமாக 6 சனிக்கிழமைகள் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் €600,000 வருமானம் கொண்டுவரும் திட்டம் என இதனை  இல்-து-பிரான்சின் பொது போக்குவரத்து (Ile-de-France Mobilities) தலைவர் Valerie Pécresse தெரிவித்துள்ளார்.

மெற்றோ சேவைகளில் 1, 2, 5, 6, 9 மற்றும் 14, ஆகிய சேவைககும், ட்ராம் சேவைகளில் T2, T3a மற்றும் T3b ஆகிய சேவைகளும் இரவு முழுவதும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு கீழ் உள்ள புகைப்படத்தை பார்க்கவும்: 

நன்றி Le Parisien.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!