International
பிரான்ஸ்

தாக்குதல் நடத்திய காவல்துறைக்கு ஆதரவான பேரணிக்கு தடை! – உள்துறை அமைச்சர் அறிவிப்பு..!!

பரிஸ் காவல்துறை தலைமையகத்தில் இடம்பெற்ற தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிக்கு ஆதரவாக நாளை வியாழக்கிழமை பேரணி ஒன்று இடம்பெற உள்ளது. 

இது தொடர்பான செய்திகளை முன்னதாக வெளியிட்டிருந்தோம். தற்போது இந்த பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மஞ்சள் மேலங்கி போராட்டங்கள் மூலம் மிக பிரபலமான சமூக ஆர்வலார Hadama Traoré, இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளார். அவர் தெரிவிக்கும் போது, <<தாக்குதல் நடத்திய Mickaël Harpon மத தீவிரவாதி அல்ல>> என குறிப்பிட்டுள்ளார். Aulnay-sous-Bois இனைச் சேர்ந்த இவர் Gonesse (Val-d’Oise) நகரில் பேரணியில் ஈடுபட உள்ளார். இதற்காக அவர் ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், இன்று புதன்கிழமை காலை உள்துறை அமைச்சர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இந்த பேரணிக்கு தடையும் விதித்துள்ளார். <<இது ஒரு இழிவான செயல்>> என அவர் மிக கடுமையாக விமர்சித்துள்ளார். <<உயிரிழந்த அதிகாரிகளை அவமதிக்கும் செயல்>> என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!