International
பிரான்ஸ்

போதை மருந்து கடத்தல் வழக்கில் 7 பேர் கைது..!!

காவல்துறையினரின் மிகப்பெரிய நடவடிக்கை ஒன்றில் ஒரே நாளில் 7 பேர் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஐவர் Le Creusot ( Saone-et-Loire ) நகரில் வைத்தும் மற்றைய இருவர் இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்குள்ளும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் போதைமருந்து கடத்தலில் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்துள்ளனர். பல மாதங்களாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு, கடத்தல்காரர்கள் தங்கியிருக்கும் இடம் போன்றவற்றையும் அறிந்துகொண்டுள்ளனர். அதன் பின்னர் அதிரடியாக ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் இந்த கைது நடவடிக்கையை நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டதாக Chalon-sur-Saone நகர அரச வழக்கறிஞர் Damien Savarzeix தெரிவித்துள்ளார். 

Dijon நகர காவல்துறையினர் உள்ளூர் காவல்துறையினரின் உதவியுடன் மொத்தம் 120 அதிகாரிகள் காலை 6 மணிக்கு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். சில இடங்களில் RAiD அதிரடிப்படையினரும் களத்தில் இறங்கினர். இந்த கும்பலின் தலைவன் என கருதப்படுகின்ற நபர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பல்வேறு ஆவணங்கள் ரொக்கப்பணங்கள் ஆயுதங்களும் போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இல்-து-பிரான்சுக்குள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள போதும் இடங்களை குறிப்பிடவில்லை.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!