International
பிரான்ஸ்

போலி ஜோந்தாம் அதிகாரிக்கு €200 தண்டப்பணம்..!

ஜோந்தாம் அதிகாரி ஒருவருக்கு €200 யூரோக்கள் குற்றப்பணம் அறவிடப்பட்ட சுவாரஷ்ய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

Nièvre மற்றும் இல்-து-பிரான்ஸ் என இரு நகரங்களில் வசிக்கும் நபர் ஒருவருக்கே இவ்வாறு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. குறித்த நபர் உண்மையில் ஜோந்தாம் அதிகாரி இல்லை. ஆனால் அவர்களின் உடையினை அணிந்துகொண்டிருந்துள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 51 வயதுடைய குறித்த நபர் கடந்த பல மாதங்களாக இந்த ஜோந்தாம் அதிகாரிகளின் உடை/ சப்பாத்து/ இலட்சணை போன்றவற்றை வைத்திருப்பதாகவும், சமூக வலைத்தளங்களில் கூட புகைப்படும் பதிவேற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜோந்தாம் வேடமணிந்து அவர் எவ்வித குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை என்றபோதும், ஜோந்தாம் அதிகாரிகளின் உடையை அணிய அனுமதி இல்லை என்பதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு €200 கள் தண்டப்பணம் அறவிடப்பட்டும், நான்கு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!