International
பிரான்ஸ்

சற்று முன் : கொரோனா தாக்கத்தால் பிரான்சில் ஒருவர் பலி..!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிரான்சில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் சற்று முன்னர் அறிவித்துள்ளார். 

இன்று சனிக்கிழமை காலை, சற்று முன்னர் இத்தகவலை Agnes Buzyn அறிவித்துள்ளார். ஆசியாவைத் தாண்டி வெளியில் இடம்பெறும் முதலாவது உயிரிழப்பு எனவும் தெரிவித்துள்ளார். உயிரிழந்த நபர் 80 வயதுடைய சீன குடியிரிமையாளர் எனவும், அவர் ஒரு சீன சுற்றுலாப்பயணி எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் உயிரிழந்துள்ள முதலாவது நபர் இவர் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

உயிரிழந்த நபரின் மகளும் கொரோனா தாக்கத்துக்கு இலக்காகி உள்ளதும், ஆனால் அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தவிர, சீனாவில் இதுவரை 1,500 பேர் கொரோனா தாக்கத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!