International
பிரான்ஸ்

Marne ஆற்றங்கரை பயன்படுத்த பொதுமக்களுக்கு தடை..!!

Neuilly-sur-Marne நகரில் உள்ள Marne ஆற்றங்கரையை பயன்படுத்த பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

நேற்று பெப்ரவரி 13 ஆம் திகதி வியாழக்கிழமையில் இருந்து இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆற்றின் நீர்மட்டம் தொடர்ச்சியாக அதிகரிப்பதை தொடர்ந்து, வெள்ள அபாயம் இருப்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. நடைபயணம், மிதிவண்டி சவாரி, இளைப்பாறுதல் போன்ற எந்த செயற்பாடுகளுக்கும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தவிர, Haute-Île பூங்காவும் மூடப்பட்டுள்ளது. இந்த தடை வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணிவரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!