International
பிரான்ஸ்

116 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய அருட்சகோதரி..!!

பிரான்சில் அருட்சகோதரி ஒருவர் சமீபத்தில் தனது 116 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். 

கடந்த செவ்வாய்க்கிழமை Toulon (Var) நகரில் வசிக்கும் André எனும் அருட்சகோதரியே தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். 1904 ஆம் வருடம் பெப்ரவரி 11 ஆம் திகதி பிறந்த இவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமையோடு 116 வயது ஆகின்றது. பிரான்சில் உள்ள மிக வயதான அருட்சகோதரி இவராவர். 

இவர் கடந்த 2009 ஆம் ஆண்டில் இருந்து Toulon நகரில் உள்ள காப்பகம் ஒன்றில் வசித்து வருகின்றார். இவரது பிறந்தநாளுக்கு சிறுவர்கள் பலர் இணைந்து மத சார்பு பாடல்கள் பாடினார்கள். André முதலாம் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போரினை சந்தித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!