International
பிரான்ஸ்

பிரான்சில் அதிகரிக்கும் கொரோனத் தொற்றுத் தொகுதிகள் – 25 இலிருந்து 46 மையங்கள் ஆக அதிகரிப்பு – காணொளி!

மே 9ம் திகதிக்கும் 19ம் திகதிக்கும் இடையில் பிரான்சில் 46 மையங்களில் கொரோனாத் தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் சிக்கலான நிலையில் வாழும் குடும்பங்களோ, முதியோர் இல்லங்களான EHPAD களோ இணைக்கப்படவில்லை.

சமூக ஒருங்கிணைப்பு மற்றும் தொழில் தேடுவதற்கான சமூக இல்லங்கள் (établissements sociaux d’hébergement et d’insertion) 13 இலும், தொழில் நிறுவனங்கள் 9 இலும், பலவீனமானவர்களின் தங்ககங்கள் 3இலும், மாற்றுத்திறனாளிகள் தங்கங்கள் 3இலும், மற்றும் பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் பலவற்றிலும் இந்தத் தொற்றுத் தொகுதிகள் இனம் காணப்பட்டுள்ளன.

கடந்தவாரம் 25 தொகுதிகள் மட்டுமே இனங்காணப்பட்ட நிலையில், குறுகிய காலத்தில் இது 46 ஆக அதிகரித்துள்ளது.


இவற்றை இனங்காண்பதின் மூலம், இரண்டாம் சுற்றுத் தொற்றுத் தடுக்கப்டுமா, அல்லது பெருமளவில் பெருகுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

merci BFMTV

 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!