International
பிரான்ஸ்

ரம்ழான் Aïd பண்டிகை பிரான்சில் ஞாயிற்றுக்கிழமை – பள்ளிவாசல்கள் திறக்கப்படமாட்டாது!

Aïd el-Fitr எனப்படும் ரம்ழான் நோன்பின் இறுதி நாள், பிரான்சில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை என, பிரான்சின் இஸ்லாமிய வழிபாட்டிற்கான ஆலோசனை சபையான CFCM (Conseil français du culte musulman) அறிவித்துள்ளது.

Aïd தொழுகைகள், இந்த அசாதாரணத் தொற்று நேரத்தில் பள்ளிவாசல்களில் நடாத்தப்படமாட்டாது எனவும், வீடுகளிலேயே பாதுகாப்பாகத் தொழுகைகளை நடாத்துமாறும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

CFCM மற்றும் Rassemblement des musulmans de France இணைந்த கூட்மைப்பு, பரிசின் பள்ளிவாசலுடன் காணொளி மூலமான ஆலோசனைகள் நடாத்திய பின்னர், குடும்ப உறுப்பினர்களுடன் மிகவும் பாதுகாப்பாக இந்தப் பெருநாளை அனுட்டிக்குமாறும் தெரிவித்துள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!