International
பிரான்ஸ்

ஈராக்கிலிருந்து படைகளை மீளப்பெறும் பிரான்ஸ்!

ஈராக்கில் Opération Chammal நடவடிக்கைக்காகச் சென்றிருந்த பிரெஞ்சுப் படைகளைத் திருப்பியழைக்கும் முடிவைப் பிரான்ஸ் எடுத்துள்ளது. இதனை இராணுவத்தின் தலைமைத் தளபதி தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 200 இற்கும் மேற்பட்ட படையினர், ஈராக்கின் படைகளிற்குப் பயங்கரவாதத்திற்கெதிரான பயிற்சிகளை வழங்குவதற்காக, பக்தாத்தில் உள்ளனர். அமெரிக்கப்படைகளுடன் இணைந்து இந்த நடவடிக்கையில் பிரெஞ்சுப் படைகள் ஈடுபட்டிருந்தன.

தங்களது இலக்கு எட்பட்டுள்ளதாகவும், மேலும், கொரோனாத் தொற்றிற்கு ஆளாகமல் இருப்பதற்காகவும், படைகளை மீளப்பெறுவதாகப் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. படைகள் நாளை பக்தாத்திலிருந்து புறப்படுகின்றனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!