International
பிரான்ஸ்

இல்-து-பிரான்சுக்குள் 7,660 பேர் கொரோனாவினால் பாதிப்பு..!!

பிரான்சில் கொரோனாவினால் அதிகம் பதிக்கப்பட்ட மாகாணமாக தொடர்ந்தும் இல்-து-பிரான்சே உள்ளது. 

இங்கு நேற்று ஒரே நாளில் 862 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர். பிராந்திய சுகாதார நிறுவனம் (l’Agence régionale de Santé) இத்தவலை புதன்கிழமை மாலை வெளியிட்டுள்ளது. இல்-து-பிரான்சுக்குள் மொத்தமாக 7,660 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். நேற்று மாத்திரம் 68 பேர் கொரோனா வைரஸ் காரணமாக இங்கு பலியாகியுள்ளனர். 

பிரான்சில் தற்போது 25,233 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2,933 பேர் நேற்று மட்டும் அடையாளம் காணப்பட்டனர். தற்போது 11,539 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2,827 பேர் மோசமான உடல்நலத்துடன் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!