International
பிரான்ஸ்

Olympique de Marseille குழுவின் முன்னாள் தலைவர் கொரோனா வைசினால் சாவு..!!

மார்செ ஒலிப்பிக் உதைபந்தாட்ட குழுவின் (Olympique de Marseille) முன்னாள் தலைவர் Pape Diouf கொரோனா வைரசினால் உயிரிழந்துள்ளார். 

நேற்று அவர் தனது 68 ஆவது வயதில் செனேகல் நாட்டில் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த இவர் நேற்றைய நாளில் செனேகலில் இருந்து பிரான்சின் நீஸ் நகருக்கு அழைத்துவரப்பட இருந்தார். செனேகல் பிரெஞ்சு தூதரகம் அவரை பிரான்சுக்கு அழைத்துவர ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் உடல்நிலை திடீரென மோசமடைந்து செனேகலின் Dakar நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சாவடைந்துள்ளார். 

Pape Diouf கடந்த 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டுவரை Olympique de Marseille  குழுவின் தலைவராக இருந்தார். தவிர இவர் ஒரு ஊடகவியலாளர் என்பதும், மார்செ நகர முதல்வர் பதவிக்கு போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!