International
பிரான்ஸ்

அதிகரித்து வரும் ஜனாதிபதின் செல்வாக்கு..!!

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் பிரதமர் எத்துவார் பிலிப்பின் செல்வாக்கு கணிசமாக உயர்ந்துள்ளது. 

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு 13 புள்ளிகளால் அதிகரித்துள்ளது. Edouard Philippe இன் செல்வாக்கு 7 புள்ளிகளால் அதிகரித்துள்ளது. 

ஜனாதிபதி மக்ரோன் தற்போது 46% (+13) புள்ளிகள் செல்வாக்குடன் உள்ளார். இந்த அளவு செல்வாக்கு இறுதியாக 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அவர் சந்தித்திருந்தார். தற்போது முழுமையான இரண்டு வருடங்களின் பின்னர் அவர் மீண்டும் இந்த அளவை எட்டியுள்ளார்.

பிரதமர் எத்துவார் பிலிப் 43% (+7) வீத செல்வாக்குடன் உள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தான் இறுதியாக இத்தனை செல்வாக்குடன் இருந்திருந்தார். 

மஞ்சள் மேலங்கி போராட்டம் மற்றும் தொடருந்து தொழிலாளர் போராட்டத்துடன் வீழ்ச்சியை கண்டிருந்த இருவரின் செல்வாக்கும், தற்போது படிபடியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

*இந்த கருத்துக்கணிப்பு மார்ச் 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் 18 வயதுக்கு மேற்பட்ட 1.007 பேரிடம் எடுக்கப்பட்டிருந்தது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!