Mon. Jan 25th, 2021

பரிசில் நேற்று அதிக வெப்பம் பதிவாகி சாதனை படைத்துள்ளது. 

நேற்று முன்தினம் திங்கட்கிழமை 33.4 ° C வெப்பம் பதிவாகியிருந்தது. செப்டம்பர் மாதம் ஒன்றின் நடுப்பகுதியில் பதிவாகும் அதிகூடிய வெபமாக அது இருந்தது. இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை அந்த சாதனை மீண்டும் முறியடிக்கப்பட்டது. 

நேற்று பரிசில் 34.3°C வெப்பம் பதிவாகியிருந்தது. 

1947 ஆம் ஆண்டின் பின்னர் இந்த அதிகூடிய வெப்பம் நேற்று பரிசில் பதிவானது. 

செப்டம்பர் மாதம் ஒன்றில் சாதாரணமாக 21°C தொடக்கம் 23°C வரையான வெப்பம் பதிவாகுவது குறிப்பிடத்தக்கது.

share

By Editor

error: Alert: Content is protected !!