International
பிரான்ஸ்

வெடிகுண்டு அச்சுறுத்தல்! – இரண்டு மணிநேரம் மூடப்பட்ட ஈஃபிள் கோபுரம்!!

வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து ஈஃபிள் கோபுரம் இரண்டு மணிநேரம் மூடப்பட்டிருந்தது. 

இன்று புதன்கிழமை நண்பகல் 12:15 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் தொலைபேசியில்  விடுக்கப்பட்ட வெடிகுண்டு அச்சுறுத்தலை அடுத்தே உடனடியாக ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டது. பார்வையாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். 

பின்னர், ஈஃபிள் கோபுரம் முற்றாக அதிகாரிகளால் தேடப்பட்டது. எவ்வித வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பகல் 2:15 மணிக்கு மீண்டும் ஈஃபிள் கோபுரம் திறக்கப்பட்டது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!