International
பிரான்ஸ்

🔴 கொரோனா தொற்று: பிரான்சில் மீண்டும் புதிய சாதனை!!

வியாழக்கிழமையைத் தொடர்ந்து, நேற்று வெள்ளிக்கிழமையும் கொரோனா தொற்று பிரான்சில் புதிய சாதனையை படைத்துள்ளது. 

நேற்று ஒரே நாளில் 25,086 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை நாள் ஒன்றில் பதிவான அதிகூடிய தொற்று இதுவாகும்.

அதேவேளை, உள்ளிருப்பில் இருந்து வெளியேறியதன் பின்னர் நாள் ஒன்றில் பதிவான அதிகூடிய உயிரிழப்பும் நேற்று பதிவானது. நேற்று ஒரே நாளில் 122 பேர் சாவடைந்துள்ளனர். 

மொத்த சாவு எண்ணிக்கை 33,303 ஐ எட்டியுள்ளது. பிரான்சில் இதுவரை மொத்தமாக 834,770 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

தொற்று வீதம் 12.6% இல் இருந்து ஒரே நாளில் 12.9% வீதமாக அதிகரித்துள்ளது. 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!