International
பிரான்ஸ்

🔴 Conflans பயங்கரவாத தாக்குதல்! – விரிவான தகவல்கள்..!!

நேற்று வெள்ளிக்கிழமை மாலை Yvelines மாவட்டத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முழுமையான தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Yvelines மாவட்டத்தின் Conflans-Saint-Honorine கல்லூரிக்கு முன்பாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 18 வயதுடைய ஒருவர், இக்கல்லூரியில் சேவைபுரியும் விரிவுரையாளர் ஒருவரை கத்தியால் தாக்கியுள்ளான். கழுத்து துண்டிக்கப்பட்டு விரிவுரையாளர் நடுவீதியில் சாவடைந்து கிடந்துள்ளார். 

சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அருகே கண்காணிப்பில் இருந்த  நடமாடும் காவல்துறையினர், தாக்குதல் இடம்பெற்ற இடத்துக்கு வருகை தந்தனர். இளைஞன் ஒருவன் கையில் கத்தி ஒன்றை வைத்துக்கொண்டு 47 வயதுடைய நபர் ஒருவரை தாக்கிக்கொண்டிருந்ததை பார்த்துள்ளனர். 

உடனடியாக காவல்துறையினர் துப்பாக்கி மூலம் தாக்குதலாளியை சுட்டுள்ளனர். தோள்பட்டையில் காயமடைந்த அவர் Eragny (Val d’Oise) நகர் நோக்கி ஓடியுள்ளான். 

பின்னால் துரத்திச் சென்ற BAC அதிகாரிகள் ஒரு கிலோ மீற்றருக்கும் குறைவான தூரத்தில் வைத்து அவனை கண்டுபிடித்தனர். அவனை கைது செய்ய முற்பட்டபோது, அவன் ‘அல்லா ஹூ அக்பர்’ என கோஷமிட்டுள்ளான். அதன் பின்னர் காவல்துறையினரால் அவன் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டான். .

சிறிய கைத்துப்பாக்கியும், ஒரு கூரான கத்தியும் அவனிடம் இருந்து மீட்கப்பட்டது. 

*****

சார்லி எப்தோ தாக்குதல் தொடர்பாக குறித்த விரிவுரையாளர் பாடம் எடுத்ததாகவும், சார்லி எப்தோ பத்திரிகையில் வெளியான முகம்மதின் கேலிச்சித்திரத்தை காண்பித்ததாலு குறித்த இளைஞன் ஆத்திரம் அடைந்துள்ளான். அதன் தொடர்ச்சியாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

****

சம்பவ இடத்துக்கு  வந்த ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், அப்பகுதியினை பார்வையிட்டார். <<எங்களுடைய குடிமகன் ஒருவரை இழந்துவிட்டோம். ஏனென்றால் அவர் மாணவர்களுக்கு கருத்து சுதந்திதத்தையும், நம்பகத்தன்மையையும் கற்றுக்கொடுத்ததற்காக!>> என மக்ரோன் தெரிவித்து, தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர். 

****

தாக்குதலாளி 18 வயதுடையவன் எனவும், அவன் Moscow நாட்டைச் சேர்ந்தவன் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. அவன் தொடர்பான மேலதிக விசாரணைகளை பரிஸ் பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர். 

🔵

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!