International
பிரான்ஸ்

Hauts-de-Seine – எண்பது வயது முதியவரை மோதி தள்ளிய ஸ்கூட்டர்! – முதியவர் பரிதாபமாக பலி!!

Hauts-de-Seine இல், ஸ்கூட்டர் ஒன்றில் மோதுண்டு எண்பது வயதுடைய முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. Levallois-Perret (Hauts-de-Seine) இல், வீதியில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த சிறிய ஸ்கூட்டர் ஒன்று, நடந்துசென்றுகொண்டிருந்த 81 வயதுடைய முதியவர் ஒருவர் மீது மோதியுள்ளது. ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற 27 வயது நபர், முதியவருடன் மோதுண்டு, இருவரும் மூன்று மீற்றர் தூரம் வரை இழுத்துச் சென்றுள்ளனர். தலையில் பலமாக அடிபட்ட நிலையில் Clichy இல் உள்ள Beaujon மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர், திங்கட்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.

27 வயது நபர், மிகுந்த காயங்களுடன் உயிர்பிழைத்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை  Hauts-de-Seine பிராந்திய காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர். Hauts-de-Seine மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டில் ஸ்கூட்டர் விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!