International
பிரான்ஸ்

La Poste – இருபது யூரோக்கள் திருடியவருக்கு ஒருவருட சிறை!!

La Poste ஊழியர் ஒருவரிடம் இருந்து €20 கள் களவாடிய நபர் ஒருவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

வடக்கு பிரான்சின் Roubaix நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி, Rue de l’Epeule வீதியில் உள்ள தபாலகத்துக்கு வந்த 45 வயதுடைய நபர் ஒருவரே இந்த திருட்டில் ஈடுபட்டிருந்தார். காலை 10 மணி அளவில் தபாலகத்துக்கு வந்த குறித்த நபர் மிக கோபமாக காணப்பட்டார். அதற்குரிய காரணம் அறியப்படவில்லை என்றபோதும், தபாலகத்தில் உள்ள கதிரைகளை காலால் உதைந்து கீழே வீழ்த்தியுள்ளார். 

பின்னர் அங்கிருந்த தபால் ஊழியரிடம் ‘எனக்கு €20 பணம் தாருங்கள். திருப்பி தருகிறேன்!’ என கோபமாக கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லை என்றதும், ஊழியரை தாக்கி பணத்தினை பறித்துக்கொண்டு வெளியேறியுள்ளார். உடனடியாக காவல்துறையினருக்கு அழைக்கப்பட்டது. 

தபாலகத்தை விட்டு வெளியேறிய நபரினை, அருகில் இருந்த மருந்தகம் ஒன்றில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அவருக்கு ஒருவருட சிறைத்தண்டனையை அந்நகர குற்றவியல் நீதிமன்றம் விதித்தது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!