International
பிரான்ஸ்

Limay – காவல்துறை அதிகாரி தற்கொலை!!

வெள்ளிக்கிழமை இரவு, காவல்துறை அதிகாரி ஒருவர் தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Yvelines மாவட்டத்தின் Nézel நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Limay நகர காவல்நிலையத்தில் பணி புரியும் காவல்துறை அதிகாரி ஒருவரை காணவில்லை என்பதால் சக அதிகாரி ஒருவர் அவரை தேடிக்கொண்டு Nézel நகரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது ஒரு தற்கொலை எனவும், உயிரிழந்த அதிகாரியின் சடலம் மீட்கப்பட்டு உடற்கூறு பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த அதிகாரி இரண்டு குழந்தைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!