International
பிரான்ஸ்

Magnanville தாக்குதல்! – இரு சந்தேக நபர்கள் கைது!!

Magnanville நகரில் காவல்துறை தம்பதியினர் மீது கோடூர தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் திகதி Magnanville நகரில், காவல்துறை தம்பதியினர் வசித்த வீட்டுக்குள் நுழைந்த பயங்கரவாதி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தான். இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளை sous-direction de l’antiterrorisme (Sdat) அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை காலை அதே நகரில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு நபர்களும் 23 மற்றும் 36 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி  Larossi Abballa க்கு,  பல முக்கியமான தகவல்களை வழங்கியதாகவும், குறிப்பாக தாக்குதலில் கொல்லப்பட்ட தம்பதியினர் (இருவரும் காவல்துறை அதிகாரிகள்) குறித்த பல தகவல்களையும் இவர்கள் பயங்கரவாதிக்கு வழங்கியுள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!