International
பிரான்ஸ்

Montreuil – கட்டிடத்தில் திடீரென பற்றிக்கொண்ட தீ! – நால்வர் காயம்!!

Montreuil – கட்டிடத்தில் திடீரென பற்றிக்கொண்ட தீ! – நால்வர் காயம்!!

செந்தனியின் Montreuil நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். பல பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

நேற்று சனிக்கிழமை நண்பகலுக்கு சற்று பின்னதாக இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. தீயை அணைக்க போராடிய பரிசை சேர்ந்த இரண்டு தீயணைப்பு வீரர்கள், மற்றும் இரு பொதுமக்களும் காயமடைந்துள்ளனர். இங்குள்ள rue Edouard-Branly வீதியில் உள்ள ஏழுமாடி கட்டிடம் ஒன்றில் 12.30 மணிக்கு தீ பற்றிக்கொண்டது.

கட்டிடத்துக்குள் இருந்த பலர் துரித கதியில் வெளியேற்றப்பட்டனர். தவிர, பல ஆயிரம் யூரோக்கள் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இரண்டு மணிநேரங்கள் கழித்து தீ முற்றாக அணைக்கப்பட்டது.
share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!