International
பிரான்ஸ்

Montreuil – வெடிபொருளுடன் கைது செய்யப்பட்ட போராளி!!

பரிசில், நபர் ஒருவர் வெடிபொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். தாம் மஞ்சள் மேலங்கி போராளி எனவும், போராட்டத்தில் கலந்துகொள்ள இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இந்த கைது சம்பவம் Montreuil (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர்  வெடிபொருட்களுக்கு உள்ளிடும் மருந்துகள் கொண்ட பை ஒன்றுடன் சென்றுகொண்டிருக்கும் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. அவர் வைத்திருந்த வெடிமருந்து தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். விசாரணைகளில் அவர், தாம் ஒரு மஞ்சள் மேலங்கி போராளி எனவும், நாளை (நேற்று, சனிக்கிழமை) இடம்பெறும் 19 ஆவது வார மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் கலந்துகொள்ள தாம் இதை எடுத்துச் சென்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

உடனடியாக கைது செய்யப்பட்டு Palaiseau காவல்நிலையத்துக்கு (Essonne)  அழைத்துவரப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வரை அவர் விடுவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!