International
பிரான்ஸ்

Nantes – தொடரும் வன்முறைகள் – இவ்வாரம் முழுவதும் தடைப்படும் இரவுநேர போக்குவரத்துக்கள்!!

Nantes – தொடரும் வன்முறைகள் – இவ்வாரம் முழுவதும் தடைப்படும் இரவுநேர போக்குவரத்துக்கள்!!

காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் கொல்லப்பட்டதை அடுத்து, Nantes நகரில் அடுத்தடுத்து வன்முறைகள் வெடித்து வருவது வாசகர்கள் அறிந்ததே. இந்நிலையில் இரவு நேர பொது போக்குவரத்துக்கள் அனைத்து இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை இரவு 10.30 மணியில் இருந்து இன்று காலை வரை பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்து, இன்று வெள்ளிக்கிழமை இரவுவும் 10.30 மணியில் இருந்து சேவைகழ்ல் நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவுகளிலும் இச்சேவைகள் நிறுத்தப்பட உள்ளன. பொது சொத்துக்கள் வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டு எரியூட்டப்பட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவில் இருந்து தொடர்ச்சியான மூன்றாவது நாள் இரவில் கலவரங்கள் இடம்பெற்று வருகின்றன. பலர் கைது செய்யப்பட்டும், விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டும் வருகின்றனர். தவிர, கலவரம் அடக்கும் படையினரும் நகர் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!