International
பிரான்ஸ்

Nantes – நான்காவது நாளாக தொடரும் வன்முறை! – காவல்துறையினர் மீது பெற்றோல் எரிகுண்டு!!

 

Nantes நகரில் நான்காவது நாளாக, நேற்று வெள்ளிக்கிழமை இரவு வன்முறை வெடித்தது. பல்வேறு வாகனங்கள் கொழுத்தப்பட்டும், காவல்துறையினர் மீது தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.


இளைஞன் கொல்லப்பட்ட வழக்கில் விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி நேற்று வெள்ளிக்கிழமை நண்பகலில் விடுவிக்கப்பட்டிருந்தார். இதைத் தொடர்ந்து மேலும் இளைஞர்கள் மத்தியில் கோபம் அதிகரிக்க, நேற்று வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் நான்காவது நாளாக வன்முறை வெடித்துள்ளது. நள்ளிரவு தண்டி, 1 மணி அளவில் Orvault, Rezé போன்ற சிறு நகரங்களிலும் Nantes இன் புறநகர்களிலும் வன்முறை வெடித்தது. வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல்வேறு மகிழ்ந்துகள் எரியூட்டப்பட்டுள்ளன. Breil மற்றும் Bellevue பகுதிகளில் உள்ள காவல்நிலையங்களுக்குள் பெற்றோல் எரிகுண்டு வீசப்பட்டுள்ளது. காவல்துறையினர் எவ்வித காயங்களுக்கும் உள்ளகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கலவரத்தில் ஈடுபட்டோர்களை காவல்துறையினர் கண்ணீர்புகை வீசி கலைந்துபோகச் செய்தனர்.


முன்னதாக, வியாழக்கிழமை இரவு 52 வாகனங்கள் எரியூட்டப்பட்டும், 8 கட்டிடங்கள் நொருக்கப்பட்டும் இருந்தன. பாடசாலைகள் உள்ளிட்ட பல பொது கட்டிடங்களும் சேதப்படுத்தப்பட்டிருந்தன. அதேவேளை, இரவு 10.30 மணிக்கு பின்னதாக இரவு நேர போக்குவரத்துக்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!