International
பிரான்ஸ்

Notre-Dame இல் தீ! – பிரான்சுக்கு உலகம் முழுவதும் இருந்து ஆதரவு!!

Notre-Dame தேவாலயத்தில் இடம்பெற்ற தீ விபத்து, உலகம் முழுவதும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பல நகரங்களில் இருந்து ஆதரவு பெருகியுள்ளது. 

<<இது மிகவும்பயங்கரமான தீ விபத்து!>> என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் தெரிவித்திருந்ததோடு, பின்னர் <<உலகில் உள்ள மிக முக்கியமான பொக்கிஷங்களில் ஒன்று. எந்த நாட்டில் இருந்தாலும் அது உலக மக்களுக்கானது>> எனவும் தெரிவித்திருந்தார். 

முன்னால் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தேவாலயம் ஒன்றுக்குச் சென்று பிராத்தனையில் ஈடுபட்டதோடு தனது கவலையினரையும், பிரெஞ்சு மக்களுக்கான ஆதரவினையும் தெரிவித்திருந்தார். <<இயற்கை அழித்துக்கொள்வதும், மனிதம் மீண்டும் தலையீட்டுவதும் இயல்பு. நாம் மீண்டும் நாளைக்காக கட்டியெழுப்புவோம்!>> என அவர் தெரிவித்திருந்தார். 

தவிர, ஜேர்மனி, எகிப்த், ஜப்பான் போன்றா நாடுகளில் இருந்தும் ஆதரவு செய்திகள் வெளியாகியிருந்தன. இலண்டன், இஸ்தான்புல் போன்ற நகர முதல்வர்களும் தங்கள் ஆதரவு கரங்களை நீட்டியுள்ளனர். 

இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்ததாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். தீயணைப்பு படைய்னர் களத்தில் போராடிக்கொண்டிருந்த போது, வீதியில் குவிந்துருந்த மக்கள் மண்டியிட்டு பிராத்தனையில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தீயணைப்பு படையினருக்கு கைகளை தட்டி தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!