International
பிரான்ஸ்

Notre-Dame : தற்போதைய நிலவரம்! – மேலதிக தகவல்கள்!!

இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30 மணிக்கு தீ கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 15, திங்கட்கிழமை 18:50 மணிக்கு பரவ ஆரம்பித்திருந்த தீயினை அணைக்க மொத்தமாக 400 தீயணைப்பு படையினர் எட்டு மணிநேரங்களுக்கும் அதிகமாக தொடர்ந்து போராடினர்.

தேவலயத்தை மறு புனரமைக்க உலகலாவிய ரீதியில் நன்கொடைகள் கோரப்பட்டுள்ளன. பிரெஞ்சு மில்லியனர் Francois-Henri Pinault, 100 மில்லியன் யூரோக்கள் நன்கொடையாக வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.

இல்-து-பிரான்சுக்கான பொது போக்குவரத்தின் முதல்வரும் மாகாண முதல்வருமான Valérie Pécresse, €10 மில்லியன் யூரோக்கள் நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

<<பிரான்சின் துயரில் இரஷ்ய மக்களும் பங்கேற்கின்றனர்>> என இரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் பூட்டின் துயர் பகிர்ந்துள்ளார்.

தேவாலயத்தை புனரமைப்பதற்குரிய நன்கொடைகளை சேகரிக்க சர்வதேச சுற்றுபோட்டிகளில் பிரெஞ்சு உதைப்பந்தாட்ட அணி விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ சம்பவம் தொடர்பான விசாரணைகள் துரித கதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது வரையில், இத்தீச்சம்பவத்துக்கான சரியான காரணம் வெளியாகவில்லை.

சற்று முன் : காலை 11 மணி அளவில் இந்த தீச்சம்பவம் மற்றும் மீள் கட்டுமானம் குறித்த முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக அமைச்சர்களிடையே முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிஸ் மாநகர சபை, தேவாலயத்தின் மீள்-கட்டுமானப்பணிகளுக்காக €50 மில்லியன் யூரோக்கள் நன்கொடையாக வழங்குவதாக முதல்வர் ஆன் இதால்கோ அறிவித்துள்ளார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!