International
பிரான்ஸ்

Notre-Dame : தீப்பிடிப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ‘தந்தை-மகள்’ புகைப்படம்!!

Notre-Dame தேவாலயம் தீப்பிடிப்பதற்கு ஒருமணிநேரத்துக்கு முன்னர் எடுக்கப்பட்ட ‘தந்தை-மகள்’ புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. 

குறித்த புகைப்படம் இதுவரை இரண்டு இலட்சம் தடவைகளுக்கு மேல் பகிரப்பட்டுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த Brooke Windsor எனும் சுற்றுலாப்பயணி, பரிசுக்கு தனது மகளுடன் வருகை தந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை ஏப்ரல் 15 ஆம் திகதி, மாலை Notre-Dame தேவாலயத்துக்கு வருகை தந்துள்ளனர். தேவாலயத்தை சுற்றி பார்த்துவிட்டு, தேவாலயத்தின் முற்றத்தில் நின்று புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளனர். 

17:52 மணிக்கு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தேவாலயத்தின் இரு மணிக்கூண்டு கோபுரமும், அதன் இடையில் ‘அம்பு’ கோபுரமும் கம்பீரமாய் நிற்க, தந்தையும் மகளும் விளையாடிக்கொண்டிருக்கும் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டு, சரியாக ஒரு மணிநேரத்தில் தேவாலயம் தீப்பிடித்து எரிந்துள்ளது. 

பின்னர் புகைப்படம் இணையத்தில் பகிர, மிக பரபரப்பாக பலரால் பகிரப்பட ஆரம்பித்தது. Brooke Windsor, BBC தொலைக்காட்சியால் நேர்காணல் செய்யப்பட்டார். தற்போது வரை இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோர் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!