International
பிரான்ஸ்

Notre-Dame தேவாலயத்தில் இருந்த 200,000 தேனீக்கள் என்ன ஆனது??!!

தேவாலயத்தின் ஒவ்வொரு கூரை வளைவுகளிலும் தேனீக்கள் கூடு கட்டி, தேனை உற்பத்தி செய்துகொண்டிருந்தன. தேவாலயத்தில் ஏற்பட்ட தீயினால்தேனீக்களுக்கு என்ன ஆனது??!

ஒவ்வொரு வருடமும், Notre-Dame தேவாலயத்தில் உள்ள தேனீக்களால் 25 கிலோ தேன் உற்பத்தி செய்கின்றன. மொத்தமாக 200,000 க்கு குறையாத அளவு தேனீக்கள் இங்கு வசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை இடம்பெற்ற மிகப்பெரிய தீயில், தேவாலயத்தின் கூரைகள் முற்றாக தீக்கிரையாகியிருந்தது. Notre-Dame தேவாலத்தில் தேனி வளர்ப்பவரான Nicolas Géant இது தொடர்பாக தெரிவிக்கும் போது,  <<ஆச்சரியமாக உள்ளது. மிகப்பெரிய தீ சம்பவத்தில் இருந்து தேனீக்கள் தங்கள் உயிரை பாதுகாத்துக்கொண்டுள்ளன. முதலில் சாட்டிலைட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தேவாலயத்தை பார்க்கும் போது, தேனீ கூடு எரிந்துவிட்டதாக எண்ணியிருந்தேன். ஆனால் அவை அனைத்தும் உயிருடன் உள்ளன!>> என தெரிவித்தார். 

<<நாடு முழுவதும் இருந்து தமக்கு அழைப்பு விடுத்து தேனீக்கள் தொடர்பாக வினாவியதாகவும், குறிப்பாக கிழக்கு ஆப்பிரிக்கா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து தொலைபேசியூடாக விசாரணைகளை மேற்கொண்டனர்>> என அவர் மேலும் தெரிவித்தார். 

அடுத்த வாரத்தில் இருந்து தேனீக்கள் மீண்டும் தேவாலயத்தில் கூடு கட்ட ஆரம்பிக்கும் என தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார். 2013 ஆம் ஆண்டில் இருந்து இங்கு தேனீக்கள் வளர்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!