International
பிரான்ஸ்

Notre-Dame தேவாலயம் எரியும் போது முன்னால் நின்று சிரித்த இரு நபர்கள்! – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

Notre-Dame தேவாலயம் தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கும் போது, அதன் முன்னால் நின்று இரு நபர்கள் சிரிப்பது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. 

டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் இந்த புகைப்படம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. குறிப்பாக அவர்கள் இருவரும் ‘இஸ்லாமியர்கள்’ என அடையாளப்படுத்தப்பட்டு இஸ்லாமிய சமூகத்துக்கு எதிராக இந்த புகைப்படம் பகிரப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவாலயம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்த போது காவல்துறையினர் பாதுகாப்பு வலையம் அமைத்திருந்தனர். அதில் உள்ள தடுப்பு பட்டிக்குள் இருந்து வெளியேறுவது போன்று எடுக்கப்பட்ட அந்த புகைப்படம், முதலில் உண்மையான புகைப்படமா என உறுதிப்படுத்தப்பட்டது. புகைப்படம் உண்மையாக எடுக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டது. 

ஆனால் அவர்கள் சிரிப்பதற்குரிய காரணம் குறித்து அறியமுடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படம் 19:54 மணிக்கு எடுக்கப்பட்டுள்ளது. அச்சமயத்தில் காவல்துறையினர் தேவாலயத்தை அண்மித்த பகுதியில் இருந்த அனைவரையும் வெளியேற்றியிருந்தனர். அதன் போது ஊடகத்தினரால் இப்புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. புகைப்படத்தில் இருப்பவர்கள் Café Panis அருந்தகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!