International
பிரான்ஸ்

Notre-Dame : நன்கொடையாக கிடைத்த €100 மில்லியன்! – முடிவுக்கு வந்த தீ!!

இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு தீ முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். 

Notre-Dame தேவாலயத்தின் திருத்தப்பணிகளுக்கா பிரெஞ்சு மில்லியனர் Francois-Henri Pinault, தாம் €100 மில்லியன் யூரோக்கள் நன்கொடை வழங்குவதாக உறுதிப்படுத்தியுள்ளார். நேற்று திங்கட்கிழமை இரவு, சம்பவ இடத்துக்கு நேரில் சென்றிருந்த ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், <<சர்வதேசத்துக்கான நன்கொடை கோரல் நாளை (இன்று செவ்வாய்க்கிழமை) திறக்கப்படும்!>> என தெரிவித்திருந்தார். 

நேற்று நள்ளிரவை ஒட்டி, பிரெஞ்சு மில்லியனர் Gucci மற்றும் Yves Saint Laurent – pledged நிறுவனங்களின் உரிமையாளர் Francois-Henri Pinault தாம் 100 மில்கியன் யூரோக்கள் அளிப்பதாக தெரிவித்திருந்தார்.  <> என தெரிவித்ததோடு, தமது குழுமத்தில் இருந்து இத்தொகை வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார். 

நேற்றைய இரவில் 400 தீயணைப்பு படையினர் களத்தில் போராடினர். இன்று செவ்வாய்க்கிழமை காலை (7 மணி நிலவரப்படி) சம்பவ இடத்தில் 100 தீயணைப்பு படையினர் உள்ளதாகவும், ஒரு சில தீயணைப்பு அதிகாரிகள் காயமடைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!