International
பிரான்ஸ்

Place des Fêtes மெற்றோ நிலையத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்!!

நேற்று புதன்கிழமை மாலை பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள Place des Fêtes மெற்றோ நிலையத்தில் பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

RATP அதிகாரிகள் இத்தகவலை வெளியிட்டுள்ளனர். நேற்று பெப்ரவரி 6 ஆம் திகதி புதன்கிழமை 19:00 மணி அளவில் Place des Fêtes நிலையத்துக்கு வந்து சேர்ந்த தொடரூந்து ஒன்றில் பெண் ஒருவர் பிரசவ வலியுடன் வந்து சேர்ந்திருந்தார். அங்கிருந்த அதிகாரிகள் உதவியுடன் குறித்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது.

தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்தில் வரவழைக்கப்பட்டு குறித்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. குறித்த பெண் அழகான பெண் குழந்தை ஒன்றை பிரசவித்தார். பின்னர் தாயும் குழந்தையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இருவரும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!